» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை!
புதன் 3, டிசம்பர் 2025 10:11:43 AM (IST)
துாத்துக்குடி அருகே மழைநீரை வெளியேற்றும் தகராறில், தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த வசந்த் (26), என்ற வாலிபருக்கும், தி.மு.க., தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டியன் (48), என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இருதரப்பினரும் மோதிக்கொண்டதில், பொன்பாண்டியன் உட்பட 20 பேர் தாக்கியதாக வசந்த், அவரது தாய் மாரீஸ்வரி, பாட்டி காளியம்மாள் ஆகியோர் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் புகாரில், பொன்பாண்டியன் உட் பட 10 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட் டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் தாளமுத் துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, பொன்பாண்டியனை உடன டியாக கைது செய்ய வலியுறுத்தி, சோட்டையன் தோப்பு ஊர் தலைவர் கருணாகரன், தர்மகர்த்தா சண்முகக்கனி ஆகியோர் தலைமையில் தாளமுத்துநகர் காவல் நிலையத்தை, மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிய ளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இப்பிரச்னை தொடர்பாக டி.எஸ்.பி., ஜமால் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









