» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிரோன் மூலம் பருத்தியில் பூச்சிக்கொல்லி தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்!

புதன் 3, டிசம்பர் 2025 8:17:11 AM (IST)

கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பருத்தியில் டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் "கோவில்பட்டி வட்டாரத்தில் பெரும்பாலும் மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்யக்கூடிய மானாவாரி விவசாயிகள் அதிகம் உள்ள பகுதி ஆகும். இப்பகுதியில் சுமார் 900 எக்டர் மானாவாரி பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

பருத்திப் பயிர்களில் பொருளாதார சேதத்தை உண்டாக்கும் பல பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது அவசியமாகிறது. விசைத்தெளிப்பான்கள் அல்லது கைத்தெளிப்பான்கள் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் பூச்சிக் கொல்லிகளின் செயல்திறன் கூடுவதுடன் ஆட்கள் கூலி, நேரம், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டு அளவும் குறைகிறது.

எனவே பருத்தி பயிரில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதனை ஊக்குவிக்கும் விதமாக வேளாண்மை துறை வாடகை கட்டணமாக எக்டருக்கு ரூ.1250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது. எனவே கோவில்பட்டி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து இந்த மானியத் திட்டத்தினை பயன்படுத்தி கொண்டு பயனடையலாம்.

இதற்கு ஆதார் அட்டை நகல், பட்டா நகல் மற்றும் ரேஷன் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கான வாடகைக் கட்டண பட்டியல் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் டிரோன் கொண்டு தெளித்த புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களை கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது எட்டயபுரம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமர்ப்பித்து விவசாயிகள் மானியத்தை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory