» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக கருடசேவை : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புதன் 3, டிசம்பர் 2025 8:12:40 AM (IST)



ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவதிருப்பதிகளில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுக்கு 4 திருவிழாக்கள் நடைபெறும். இதில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான கைசிக திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி பொலிந்து நின்றபிரான் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆதி நாயகி, குருகூர் நாயகி தேவியர்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். 

ஆழ்வார் குறட்டிற்கு நம்மாழ்வார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியர்கள் எழந்தருளினார். பின்னர் அண்ணாவியார் பாலாஜி ஆதிநாதன் பெருமாள் முன்னிலையில் கைசிக புராணம் வாசித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியை வலம் வந்து கருடசேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமி, நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜன், கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory