» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொத்து வரி, குடிநீர் வரியை செலுத்திட வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு

செவ்வாய் 2, டிசம்பர் 2025 3:56:45 PM (IST)

அனைத்து கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களிடமிருந்து 2025 -26 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்திட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுள்ள வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிப்பு என்னவென்றால், கிராம ஊராட்சியின் பகுதிகளிலுள்ள தங்களது வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 172, 174 மற்றும் 242 இன் படி 2025-2026 ஆம் நிதியாண்டிற்கு கிராம ஊராட்சிக்கு சொத்து வரியினை 31.05.2025-க்குள் செலுத்தியிருக்க வேண்டும்.

மேற்படி நாளதுவரை செலுத்தாதவர்கள் 15.12.2025 க்குள் தங்களது ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ அல்லது கணினி மையங்களிலோ தங்களின் வரி விதிப்பு எண்ணை சரிபார்த்து தவறாது இணையவழியில் ( https://vptax.tnrd.tn.gov.in/ ) செலுத்தி, செலுத்தப்பட்டமைக்கு உரிய கணினிவழி இரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், இவ்வாறே குடிநீர் கட்டணத்தை மாதாந்திரம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்ற அளவிலோ நிலுவையின்றி செலுத்திடவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

BabuDec 4, 2025 - 08:04:29 AM | Posted IP 104.2*****

road la malai thanninikka kodathu nu road pduravan kitta konjam solunga sir

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory