» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தலைமை அலுவலகத்தில் முற்றுகை!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:40:58 PM (IST)



தூத்துக்குடியில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காலி பாட்டில்களை திரும்பி ஒப்படைக்கும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது மாற்றாக பார் நடத்தும் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 123  டாஸ்மாக் கடைகளை அடைத்து விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் மதுரை மண்டல மேலாளர் இளவரசன், மாவட்ட மேலாளர் அய்யப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


மக்கள் கருத்து

டேய்Dec 2, 2025 - 12:58:57 PM | Posted IP 172.7*****

யாருடா நீங்கள் எல்லாம் ? பொதுமக்களுக்கு போதை ஏற்ற ஊத்தி கொடுக்கும் பணியாளர்கள் அது புனிதமான வேலையா? வேற வேலை பாருங்க போங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory