» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கார்த்திகை அகல் விளக்கு விற்பனை ஜோர்
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:37:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இரவில், வீடுகள் தோறும் அகல்விளக்கு தீபம் ஏற்றுவதும், கொழுக்கட்டை தயார் செய்து வழிபடுவதும் வழக்கம் ஆகும். இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை விழா நாளை (டிச.3) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தீபம் ஏற்றுவதற்கான அகல்விளக்குகளை மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வாழவல்லான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் அகல்விளக்குகள் தயாரிக்கப்பட்டு தூத்துக்குடிக்கு கொண்டு வந்து கடைகளில் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிளிக்கூண்டு விளக்கு, தானேவிளக்கு, குபேர விளக்கு உள்ளிட்ட விதவிதமான விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ரூ.10 முதல் ரூ.150 வரை விதவிதமான விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
கோவில்பட்டி பகுதிகளில் உள்ள பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் அகல், தீப விளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. ரூ. 50 முதல் ரூ. 500 வரை பல்வேறு விதமான விளக்குகள் விற்பனைக்காக வந்துள்ளன. இது குறித்து வியாபாரி எஸ். விஜய பால்சிங் கூறுகையில், விருத்தாச்சலம், பண்ருட்டி, மானாமதுரை பகுதிகளில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளும், கொல்கத்தாவிலிருந்து டெரக் கோட்டா விளக்குகளும், தில்லியில் இருந்து தண்ணீா் ஊற்றினால் எரியும் எல்.இ.டி. விளக்குகளும் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளன என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









