» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தையை எரித்துக் கொன்ற மகளுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 7:32:16 PM (IST)
சொத்து பிரச்சனையில் தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள்தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விபி சித்தன்நகரைச் சேர்ந்த பெருமாள்சாமி மகன் சுப்பையா (72/2019) என்பவரை கடந்த 2019ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக பெட்ரோல் ஊற்றி பற்றவைத்து கொலை செய்த வழக்கில் சுப்பையாவின் மகள் மூக்கம்மாள் (58/2025) என்பவரை நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் இன்று முக்கமாளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சுதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









