» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி வழக்குகளில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
திங்கள் 1, டிசம்பர் 2025 4:09:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் கைதான 3பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 01.11.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்து கல்யாணி (24) என்பவரையும் கடந்த 27.10.2025 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ணபெருமாள் (26) மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கில் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் முருகன் (எ) ஸ்டீபன் (43) ஆகிய 3 பேரை போலீசார் கைது செ்யதனர்.
இவர்கள் மூவர் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (01.12.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 134 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









