» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முறையாக பராமரிப்பு இல்லாத பிரண்டார்குளம்: வீணாகும் மழைநீர் - விவசாயிகள் வேதனை!

திங்கள் 1, டிசம்பர் 2025 12:34:14 PM (IST)



நாசரேத் அருகே உள்ள பேய்க்குளம் பிரண்டார் குளத்தின் மடை முறையாக பராமரிக்கப் படாததால், தண்ணீர் வீணாக வெளியேறி செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள பேய்க்குளத்தை அடுத்து பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பிரண்டார்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த பல ஆண்டுகளாக, மடைகள் சரிவர பராமரிக்கப்படாமல் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.இதனை சீரமைக்கக் கோரி,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிகழ்ச்சியில், மழைக் காலத்திற்கு முன்னதாக மடைகள் மற்றும் குளத்து கலுங்கு பகுதி சீரமைக்கப்படாததால், கலுங்கு சேதம் அடைந்த நிலையிலும், குளத்து மடையிலிருந்து, நீர் 24 மணி நேரமும் வெளியேறிய நிலையில் உள்ளது. இதனால் சேமிக்கப்பட வேண்டிய குளத்து நீர் வெளியேறி, சில நாட்களிலேயே குளம் வறண்டு போகும் அபாயம் உள்ளது. 

எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, கலுங்கு பகுதி மற்றும் மடைகளிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க மடையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory