» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 7 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:45:56 AM (IST)
டிட்வா புயல் அச்சுறுத்தல் விலகியதையடுத்து 7 நாட்களுக்கு பின்னர், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் டிட்வா புயல் காரணமாக கடந்த ஏழு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று வெயில் தலைகாட்டியது. கடற்பகுதியில் காற்று குறைந்தது தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீனவளத்துறை அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 112 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. அதேபோன்று திரேஸ்புரம், மணப்பாடு, பெரியதாழை தருவைகுளம் உள்ளிட்ட பகுதியிலிருந்து நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஏழு நாட்களுக்கு பின்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்,
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









