» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:23:24 AM (IST)
கோவில்பட்டியில் சாலையில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பொதுமக்கள், போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இனாம் மணியாச்சியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (40). தொழிலதிபர். சம்பவத்தன்று இவர், கோவில்பட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து ரூ.2 லட்சத்தை வாங்கி ஒரு பையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வழியில் இவரது பணப்பை சாலையில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், சாத்தூரை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளி குமார் (30), இனாம்மணியாச்சி பகுதியில் அநாதையாக கிடந்த ரூ.2 லட்சத்துடன் கிடந்த பையை எடுத்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சாலையில் கிடந்த அந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த குமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இனஸ்பெக்டர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் பாராட்டினர். பின்னர் அந்த பணத்தை ஜெய்சங்கரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









