» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சலூன் கடைக்காரரை கடத்தி சித்திரவதை: 2 பேர் கைது
ஞாயிறு 30, நவம்பர் 2025 12:14:04 PM (IST)
தூத்துக்குடியில் சலூன் கடைக்காரரை கடத்தி சென்று சித்திரவதை செய்ததாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன் மகன் கணேசன் (37) இவர் மில்லர்புரத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பரான பி அன் டி காலனி 5வது தெருவைச் சேர்ந்த வேல்சாமி என்பவர் கணேசனிடம் ரூ.30,000 என்பவர் மற்றும் தங்க வளையல்கள் கொடுத்திருந்தாராம். பல மாதங்கள் ஆகியும் அதை அவர் திருப்பித தரவில்லயாம்.
இதனால் வேலுச்சாமி தனது மகன் மனோஜ் (27) என்பவரிடம் கணேசன் பணத்தை திருப்பி தராமல் தன்னை ஏமாற்றி வருவதாக கூறினாராம் இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் தனது நண்பரான வடக்கு பீச் ரோடு கரிக்குளம் காலனியைச் சேர்ந்த சகாயராஜ் மகன் தர்மராஜ் (27) என்பவருடன் கணேசன் வீட்டுக்கு சென்று கணேசனை தனது பைக்கில் கடத்தி சென்று முத்துநகர் பீச் வைத்து அடித்து சித்திரவதை செய்தார்களாம்.
பின்னர் பி அன் டி காலனியில் உள்ள தங்களது வீட்டுக்குள் வைத்து பெல்டால் பிரச்சனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பணத்தை தரவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி அவரை அனுப்பி வைத்தார்களாம். இதில் காயமடைந்த கணேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மனோஜ் மற்றும் அவரது நண்பர் தர்மராஜ் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர் இதில் கைது செய்யப்பட்ட மனோஜ் கப்பலில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









