» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணிடம் 9 பவுன் நகை திருட்டு : மொபட் பெட்டியை உடைத்து மர்மநபர் கைவரிசை
ஞாயிறு 30, நவம்பர் 2025 9:27:03 AM (IST)
கோவில்பட்டியில் மொபட் பெட்டியை உடைத்து 9 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி தமிழ்செல்வி (45). இவர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் 9 பவுன் நகை அடகு வைத்திருந்தார். நேற்று முன்தினம் தமிழ்செல்வி அந்த வங்கிக்கு சென்று, பணத்தை செலுத்தி அடகு வைத்திருந்த 9 பவுன் நகையை திருப்பினார். பின்னர் அந்த நகை, செல்போன் ஆகியவற்றை தனது கைப்பையில் வைத்து கொண்டு, அதனை மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.
தொடர்ந்து தமிழ்செல்வி தனது வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் வழியில் பழைய மார்க்கெட் ரோட்டில் உள்ள முட்டை கடை முன்பாக தனது மொபட்டை நிறுத்திவிட்டு, அங்கு முட்டை மற்றும் காய்கறிகளை வாங்கினார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது மொபட்டின் இருக்கைக்கு அடியில், நகை, செல்போனுடன் இருந்த கைப்பை திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
தமிழ்செல்வி கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக அவரை பின்தொடர்ந்து வந்து, மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியை உடைத்து திறந்து, நகை, செல்போனுடன் இருந்த கைப்பையை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்செல்வி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுக சார்பில் மரியாதை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:52:22 PM (IST)

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து : பால் வியாபாரி உயிரிழப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:04:32 PM (IST)

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் : ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 11:51:25 AM (IST)

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பார்கள்: கனிமொழி
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:34:19 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் கைது : தூத்துக்குடியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:25:52 AM (IST)

முன்னாள் ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி : சட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 8:20:37 AM (IST)









