» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்: 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
சனி 29, மார்ச் 2025 4:58:51 PM (IST)

புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வீரபாண்டியன் பட்டணத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்குத் தந்தையர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் சாம்பல் புதன் அன்று தவக்காலம் தொடங்கி 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தில் பலர் அசைவம் தவிர்த்து விரதம் இருப்பர். இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் புனித வெள்ளிக்கிழமை அன்று மூட வேண்டும் என மதுவிலக்கு சபையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டணத்தில் ஊர் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு சபைனர் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன், வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தை அலாசியுஸ், சிலுவை டிமெஸ், ஏரல் ரவீந்திரன் பர்னாண்டோ, புன்னைகாயல் டைட்டஸ், ஜீவாநகர் இருதயராஜ், கொம்புத்துறை பிரதிஸ் காட்டார், அமலிநகர் வில்லியம் சந்தானம், மணப்பாட ஜெயகர், ஆறுமுகநேரி வளன், பழைய காயல் ராஜேஷ், ஆலந்தலை சில்வெஸ்டர், ஊர்நலக்கமிட்டி தலைவர்கள் அமலிநகர் செல்வராஜ், ஆலந்தலை ஆசைத்தம்பி, ஜீவாநகர் ஜெயசிங், கொம்புத்துறை பிரான்சிஸ், சிங்கித்துறை மனுவேல், பழைய காயல் ஆரேக்கியராஜ், மணப்பாடு யாகப்பர் ஆலய கமிட்டி கபிரியேல், மற்றும் வீரபாண்டியன்பட்டணம் கப்பல் மாலுமிகள் சங்கத்தினர், துறைமுக கமிட்டியினர் உள்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
எவன்Mar 31, 2025 - 12:23:10 PM | Posted IP 162.1*****
சாராய ஆலை நடத்தும் தீ முக குடும்பத்துக்கு துட்டு வேணும்ல
GaneshMar 29, 2025 - 07:07:11 PM | Posted IP 162.1*****
ஈஸ்டர் அன்றும் சேர்த்து மூடவேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

பணி ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:26:36 PM (IST)

மத்திய அரசின் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:52:57 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:33:15 PM (IST)

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:21:59 PM (IST)

தூத்துக்குடியில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:16:08 PM (IST)

தூத்துக்குடி வின்பாஸ்ட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு என வதந்தி : இளைஞர்கள் ஏமாற்றம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:37:13 AM (IST)

Bible LearnerMar 31, 2025 - 06:05:09 PM | Posted IP 172.7*****