» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி நகர அணி வெற்றி: எஸ்பி கோப்பையை வழங்கினார்

திங்கள் 20, ஜனவரி 2025 7:19:40 PM (IST)



தூத்துக்குடியில் காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் கோப்பை வழங்கி பாராட்டினார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக ஆயுதப்படை மற்றும் அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன்படி அரை இறுதிப் போட்டிக்கு தகுதியான தூத்துக்குடி நகரம் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்ட காவல்துறை அணியினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட அணியினர் வெற்றி பெற்றும், ஆயுதப்படை-II மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட அணியினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஆயுதப்படை-II அணியினரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

மேற்படி தூத்துக்குடி நகரம் மற்றும் ஆயுதப்படை-II அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியை இன்று (20.01.2025) மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  துவக்கி வைத்து வெற்றி பெற வாழ்த்தினார். பின்னர் மேற்படி போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி நகர உட்கோட்ட அணியினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பரிசுகோப்பை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  மதன்   ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory