» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு!
திங்கள் 20, ஜனவரி 2025 4:42:46 PM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகரைச் சேர்ந்தவர் பவுல் அய்யாப்பழம் மகன் ஜேசுதாசன் (22) இவர் கடந்த 14ஆம் தேதி முத்தையாபுரம் எம்.சவேரியார் புரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சோபா ஜென்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.