» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுப் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்
திங்கள் 20, ஜனவரி 2025 4:19:45 PM (IST)
தூத்துக்குடியில் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் - 2025 இறுதிச்சுற்றுப் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற 54வது பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் - 2025 இறுதிச்சுற்றுப் போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் சோமு, கல்லூரி துணை முதல்வர் அசோக், துணை பேராசிரியர் கற்பகவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.