» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வியாழன் 21, நவம்பர் 2024 12:48:11 PM (IST)
தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் தொடர் கனமழையால் மாநகராட்சி பகுதிகளில் பி அன்டு டி காலனி, கதிர்வேல் நகர், பிஎம்சி பள்ளி அருகே உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதாக அப்பகுதி குடியிருப்புவாசிகளிடமிருந்து தகவல் வந்ததை அடுத்து, அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆணையர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் சேகர், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர், வட்டச் செயலாளர் மந்திரகுமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
முத்து நகர் குலாம்Nov 21, 2024 - 02:11:19 PM | Posted IP 162.1*****
கடந்த பல வருடங்களாக மழையால் பாதிக்கபட்டு வரும் அதே பகுதியில் கால்வாய் பணி முடிந்தும் சாலைபணி முடிந்தும் மழை நீர் வடியவில்லை மாநகராட்சி பொறியாளர்களின் சாதனையா அல்லது அரசியல் வாதிகளின் வாக்கு அரசியலா, மேற்படி பகுதியில் விகாசா பள்ளி அருகில் உள்ள குறுக்கு தெருக்களில் சாலை கால்வாய் வசதி செய்யாமல் வருடா வருடம் மழை நீர் எடுக்கும் பணியை மட்டும் தொடர்ந்து செய்வது யாருடைய வரி பணம் வீணாகிறது, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் குறுக்கு தெருக்களின் சாலைக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்ட்டுள்ளது என்று மட்டும் புகாருக்கு பதில் அளிக்கும் முதலமைச்சர் தனிபிரிவு அதிகாரிகளின் அலட்சியத்திற்கு நடவடிக்கை எடுக்குமா என்று பொது மக்கள் கேட்கின்றனர்
Es krishnanNov 21, 2024 - 02:15:03 PM | Posted IP 162.1*****