» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 2 நாட்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு!
புதன் 20, நவம்பர் 2024 9:26:04 PM (IST)
ஓசூரில் வழக்கறிஞர் கண்ணன் கொடூர கொலையை கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் 2 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
ஓசூரில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் கண்ணன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அவசர திட்டமாக அமல்படுத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள்2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு அறிவித்துள்ளனர். அதன்படி நாளை 21ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் நாளை 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2 நாட்கள் நீதிமன்றம் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் 300 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 750 வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இது குறித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தனசேகர் டேவிட் கூறும்போது "தமிழ்நாட்டின் வழக்கறிஞர் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வழக்கறிகளுக்கு உடனடியாக பாதுகாப்பு சட்டத்தை அவசர திட்டமாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் என தெரிவித்தார்.