» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

புதன் 20, நவம்பர் 2024 4:22:29 PM (IST)

நெல்லை, குமரி உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, தென்காசி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.

இதன் காரணமாக வருகிற 23-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

SelvarajNov 21, 2024 - 06:39:40 AM | Posted IP 172.7*****

School leave illaiyaa

BalamuruganNov 20, 2024 - 09:35:08 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி வ உ சி துறைமுக காக்காசெட் லேபர் காலணிவழியாக செல்லும் வெள்ளநீர் பாதை இன்னும் சீரமைக்கபடாமல் உள்ளது இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பிரிட்ஜ் வாஷிங்மெஷின் டிவி மற்றும் பொருட்களை கட்டிலில் தூக்கிவைத்துள்ளனர் மேயர் இது குறித்தும் ஆய்வு செய்யவேண்டும். மேலும் குளங்கள் உடைந்து வெள்ளம் வரும் நிலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக ஊரில் உள்ள ஆலயங்களின்,சர்ச்சின், மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மழைநீரை வெளியேற்றும் பணி: மேயர் ஆய்வு

வியாழன் 21, நவம்பர் 2024 11:26:43 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory