» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கண்மாய் பகுதியில் பனை விதை நடும் பணி: யூனியன் சேர்மன் துவக்கி வைத்தார்!
வெள்ளி 8, நவம்பர் 2024 4:47:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே குப்பனாபுரம் நான்கு கண்மாய் பகுதிகளில் பத்தாயிரம் பனை விதைகள் நடவுப்பணியை யூனியன் சேர்மன் ரமேஷ் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் நீர் நிலைகளை பாதுகாக்கவும் மண் அரிப்பை தடுத்து மழை நீரை சேமிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து 2024 நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியினை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஓட்டப்பிடாரம் வட்டம் கீழமங்களம் ஊராட்சி குப்பனாபுரம் கிராம மக்கள் சார்பில் குப்பனாபுரம் நான்கு கண்மாய்களில் 10,000 பனை விதைகள் நடும்பணி திருவிழா நடை பெற்றது. கீழமங்களம் ஊராட்சி மன்றத்தலைவர் அ.ஜெயக்கனி தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய கவுன்சிலர் ஆ.அரிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் லா.ரமேஷ் கலந்து கொண்டு பனைமரங்களின் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி பத்தாயிரம் பனைவிதைகள் நடவுப்பணியை துவக்கி வைத்தார். எட்டு நாட்களாக சேகரிக்கப்பட்ட பத்தாயிரம் பனைவிதைகளையும் நான்கு குளத்தின் கரைகளிலும் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.சிவகாமி, நூறு நாள் வேலை திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி பாலிங்க், பணி மேற்பார்வையாளர் முரளி கிருஷ்ணன், ஊராட்சி செயலர் குருசாமி மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை எம்.வினோத், டி. காசிங்க்ராஜ்,எம். குருச்செல்வம் கிராமத்தின் இளைஞர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெண்கள் ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக பணித்தள பொருப்பாளர் ஜி.புஷ்பா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பு : பூ மார்க்கெட், குடியிருப்புப் பகுதிகளில் ஆதரவு திரட்டல்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:10:56 PM (IST)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

கருணாநிதியின் கொள்கைகளைத் திமுகவினர் புதைத்து விட்டார்கள் - குஷ்பூ காட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:34:04 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்கள் பொருத்தும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:25:20 PM (IST)

தொகுதி மக்களுக்காக முழுவீச்சில் பணியாற்றினேன் : விளாத்திகுளத்தில் மார்கண்டயேன் வாக்குசேகரிப்பு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:44:27 PM (IST)






