» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைத் தமிழர்களுக்கு 56 குடியிருப்புகள் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!

வெள்ளி 4, அக்டோபர் 2024 3:01:43 PM (IST)



சிலுவைப்பட்டியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 56 குடியிருப்புகளை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 56 குடியிருப்புகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: இங்கே அமைச்சர் பேசுபோது நமது முதலமைச்சர் தமிழக மக்களுக்காகவும், மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மக்களுக்கும் எத்தனை திட்டங்களை வகுத்து அவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள். உங்களுக்கு நன்றாகத் தெரியும் இந்த முகாமின் பேரின் கூட புலம்பெயர்ந்த மக்களுடைய மனதை புண்படுத்தக்கூடிய வகையில் இருக்கக்கூடாது என்ற வகையில் மறுவாழ்வு முகாம்கள் என்று பெயர் மாற்றி தந்திருக்கக்கூடிய முதலமைச்சர் அண்ணன் தளபதி. 

தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சகோதர, சகோதரிகள் எந்த நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இலட்சக் கணக்கான வீடுகள் கட்டித் தரக்கூடிய திட்டத்தை வகுத்து இன்று மிகச்சிறப்பான அளவிலே வீடுகளை கட்டி தந்திருக்கக்கூடிய அவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் என் தொகுதியின் சார்பிலும், உங்களுடைய சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருமுறை ஒரு முகாமிலே இருக்கக்கூடிய இளம் பெண்ணை சந்தித்து பேசி கொண்டிருந்தபோது அந்தப் பெண் கேட்டார் ‘படி படி என்று சொல்கிறீர்கள்" நான் படிச்சிட்டு என்ன பண்றதுன்னு கேட்டார். இந்த சமூகத்தில் இப்படிப்பட்ட முகாம்களில் இருக்கக்கூடிய புலம்பெயர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது வாய்ப்பு இல்லாத ஒன்றாக இருந்தது. நர்சிங் உள்ளிட்ட எது முடித்து இருந்தாலும் வெளியில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெறுவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று, பெரும்பாலும் முகாம்களில் இருக்கக்கூடிய ஆண்கள் பெயிண்டர்களாக பல இடங்களில், பல ஊர்களில் சென்று வேலை செய்துவிட்டு முகாமிற்கு வரக்கூடிய வேலை தான் இருந்தது.

பெண்களும் அவர்களுக்கு கை தொழில் போன்ற விஷயங்களை தாண்டி எது படித்தாலும் வேலை வாய்ப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தது. அவையெல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வர ‘Skill Development" என்று ஒன்றை உருவாக்கி படித்தால் உங்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய ஆட்சியாக முதலமைச்சரின் ஆட்சி இருக்கின்றது. என்றும் உங்களுக்கு உறுதுணையாக நின்று செயல்படக்கூடிய ஆட்சியாகவும் இருக்கின்றது.

முதலமைச்சர் தொடர்ந்து இந்த மக்களின் குடியுரிமைக்காக ஒன்றிய அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி போராடி கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் இங்கே இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதற்காகவும் அவர்களுடைய அடுத்த தலைமுறையை பாதுகாக்கக்கூடிய வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகை செய்து வருகிறோம்.

தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்திலே மருத்துவக் கல்லூரிக்கு போய் படிக்கக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கி தந்தது தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி. இன்று நீட் போன்ற பல தேர்வுகளால் அந்த வாய்ப்புகள் பரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்திலே வேலையை நான் உறுதி செய்து தருகிறேன் என்று அந்த திட்டத்தை உருவாக்கி நமக்காக முதலமைச்சர் அளித்திருக்கிறார்கள். 

அதே நேரத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தன்னுடைய நாடு, தன்னுடைய சொந்தம், சுற்றத்தார் எல்லாவற்றையும் ஒரு போர் காலக்கட்டத்திலே நாம் எவையெல்லாம் என்னுடையது, என்னுடைய மண், என்னுடைய மரம், என்னுடைய வீடு என்று நினைத்துக் கொண்டு இருந்தேனோ எல்லாவற்றையும் விட்டு விட்டு இன்னொரு இடத்திலே புலம்பெயர்ந்து அங்கே வாழ வேண்டிய நிலையிலே இருக்கும் போது, ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் வைக்கக் கூடிய அந்த நிலையிலே இவர்கள் இங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த சூழலிலே மன உளைச்சலை புரிந்து கொண்டு இன்றைக்கு அவர்களுடைய மனநலனுக்காக ஒரு முகாமை அமைத்து அவர்களுக்கு என்று ஒரு தொலைபேசி எண்ணை வழங்கி உங்களுக்கு மன உளைச்சல் இருக்கக்கூடிய நேரத்திலே நாங்கள் இருக்கிறோம் என்றும் முன்வரக் கூடிய ஒரு திட்டத்தை மெண்டல் ஹெல்த் பாலிசியை இன்று அதற்கான தரவுகளை வெளியிட்டு இருக்கக்கூடிய சுகாதாரத்துறைக்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால் இது அதிகமாக பலபேர் சிந்தித்து கூட பார்க்காத ஒன்று. இந்த முகாம்களில் இருக்கக்கூடியவர்களின் மனநிலையை புரிந்து அவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசனைகளையும் மருத்துவர்கள் வழங்குவார்கள். ஆகவே இவை அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவறும் இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட 105 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 19,572 குடும்பங்களைச் சார்ந்த 57,609 நபர்கள் வசித்துவருகிறார்கள் இவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருதல் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 முகாம்களில் 495 குடும்பங்களை சார்ந்த 1580 நபர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 66 பேர் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இளநிலை கலை மற்றும் அறிவியல் பயின்றுள்ளனர். மேலும், 6 பேர் (டீ.நு) இளநிலை தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பயின்றுள்ளனர்.

நடப்பாண்டில் முதன் முறையாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக கலங்கரை எனும் தலைப்பில் Carrier Counselling வழங்கப்பட்டது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 2256 மாணவர்கள் பயனடைந்தனர். இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 முகாம்களில் வசிக்கும் 92 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. இதன் முதற்கட்டமாக கோயம்புத்தூர், திருப்பத்தூர். தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், நேன்டி பௌன்டேஷ்ன் மற்றும் திறன்மேம்பாட்டு நிறுவனத்தின்(வுNளுனுஊ) உடன் இணைந்து பள்ளிக் கல்வி முடித்த 9 பட்டதாரிகள் பயிற்சி பெற்ற நிலையில் ஒருவர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார். 

இதுபோலவே முந்தைய கற்றலின் அங்கீகாரம் (சுPடு) என்ற பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 109 பேர் பயனடைந்துள்ளனர். இரண்டாம் கட்டமாக தற்போது, பொறியியல் மற்றும் வணிகம் தொடர்பான பயிற்சிகள் வழங்குவதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. (RPL, Finishing School Skill vouched) 50 camps நடப்பு நிதி ஆண்டில் 3000 இலங்கை தமிழர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக ரூ.6,17,00,000/- நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் சுயசார்புடன் வாழவும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழகம் முழுவதும் 10 தொழிற்கூடங்கள் ரூபாய் 3 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அவர்களின் நீட்டித்த நீண்ட நாள் தேவைகளான குடியுரிமை மற்றும் தாயகம் திரும்புதல் போன்றவற்றிருக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைக் குழு ஒன்று தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழு அறிவுரித்தியவாறு முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல், அசையும் அசையா சொத்துக்கள் வாங்குதல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

மேலும், குடியுரிமை வழங்குவதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி பரிட்சார்ந்த முறையில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டதில் இதுவரை 3 நபர்கள் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர். முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டமும், மரக்கன்று நடுதல் திட்டமும் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் மூலம் சீர்மையாக வழிகாட்டுதலுடன் கூடிய திறன் மேம்பாடு, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி இறுதியாக னுரசயடிடந ளழடரவழைளெ எனப்படுகின்ற குடியுரிமை வழங்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை (ஆணையர்) பா.கிருஷ்ணமூர்த்தி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ரா.சரவணக்குமார், தனி வட்டாட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்) சிவக்குமார் மற்றும் பொது மக்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory