» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் : அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி

செவ்வாய் 24, செப்டம்பர் 2024 3:10:13 PM (IST)


தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி செலுத்தினார். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 2வது தெருவைச் சேர்ந்த ஆர்.சந்தானராஜ் என்பவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் முன் வந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்த நோயாளியின் மனைவி, மகன் மற்றும் உறவினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் உறுப்பு தானம் செய்தவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் உடல் உறுப்பு தானம் செய்த ஆர்.சந்தானராஜ் அவரது உடலுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்பு, அமைச்சர், மாவட்ட ஆட்சியர் , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் , தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ள ஆர்.சந்தானராஜ் அவர்களின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் முன் நடந்து சென்று தங்களது நன்றியையும், மரியாதையும் செலுத்தினர்.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ - மாணவியர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆர்.சந்தானராஜ் அவர்களின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் மீது மலர்களை தூவி மரியாதை செய்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக உடல் உறுப்பு தானத்திற்காக மூளைச்சாவு அடைந்த நோயாளிடமிருந்து உறுப்புகள் ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் தமிழ்நாட்டில் 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிர் காக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு உறுப்பு தானம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதுவே முதல் உடல் உறுப்பு தானம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

SivaSep 25, 2024 - 08:34:19 AM | Posted IP 162.1*****

RIP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மழைநீரை வெளியேற்றும் பணி: மேயர் ஆய்வு

வியாழன் 21, நவம்பர் 2024 11:26:43 AM (IST)

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory