» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!
வியாழன் 12, செப்டம்பர் 2024 4:23:40 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாளச்சாக்கடை திட்டத்தில், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூபாய் 152.14 கோடி மதிப்பீட்டில் 16, 17, 26, 49, 50 ஆகிய 5 வார்டுகளுக்கான பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 15வது வார்டுக்குட்பட்ட தபால்தந்தி காலனியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளையும்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காலாங்கரை கிராமம் கோரம்பள்ளம் கண்மாயில், கடந்த வருடம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நிரந்தர சீரமைப்புப் பணிகளையும், தொடர்ந்து, தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்ட காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் (உப்பாத்து ஒடை) குறுக்கே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றும் வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் இன்று (12.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள காலஅளவிற்குள் விரைவாக நிறைவுசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ், அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, உதவி செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநிலக் கோட்டம்) ஆதிமூலம், தலைமைப் பொறியாளர் வி.ஆறுமுகம், உதவிப் பொறியாளர் வான்மதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
ஹென்றிSep 12, 2024 - 09:07:38 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி முதல் மணியாச்சி ரயில் நிலையம் வரையிலான ரயில் இருப்புப்பாதைக்கு இணையாக சாலை வசதி ஏற்படுத்தித் தரும் நீண்ட கால திட்டம் இன்னும் நிலுவையில் உள்ளது. இதனை நிறைவேற்ற ஆவண செய்ய கேட்டுக் கொள்கிறேன்
Kayal jesmudeenSep 12, 2024 - 06:48:53 PM | Posted IP 172.7*****
இந்த பணி துரிதமாக நடைபெற்று மக்கள் பயன் பெற உதவிட அரசையும், அதிகாரிகளையும் கேட்டு கொள்கிறேன்
AbdullahSep 12, 2024 - 11:07:41 PM | Posted IP 172.7*****