» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சியே முக்கிய நோக்கம் : ஆட்சியர் க.இளம்பகவத் பேட்டி

புதன் 21, ஆகஸ்ட் 2024 10:45:06 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள், கல்வி, மருத்துவம், போன்ற துறைகளில் கவனம் செலுத்துவது என்னுடைய முக்கியமான நோக்கம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தின் 28வது புதிய ஆட்சியராக க.இளம்பகவத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆட்சியர் க.இளம்பகவத், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டமானது மிகப் பாரம்பரிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் முக்கியமான தலைவர்கள் வாழ்ந்த மாவட்டம் மற்றும் வரலாறு சிறப்பு மிகுந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாவட்டத்தினுடைய நலன்களுக்கும், மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வது தான் என்னுடைய நோக்கம். 

குறிப்பாக, அரசுத்துறைகளில் இருக்ககூடிய வளர்ச்சி திட்டங்கள், கல்வி, மருத்துவம், திறன் மேம்பாடு, திறன்மேம்பாடு சார்ந்த வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்துவது என்னுடைய முக்கியமான நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், அரசினுடைய நலத்திடங்கள் அனைத்தும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும், மாவட்டத்தினுடைய வளர்ச்சி அனைவருடன் உள்ளடங்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாவட்டத்தினுடைய வளர்ச்சி பலன்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தஞ்சாவூரில் சோழன்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர்.  சொந்த கிராமத்தில் ஆரம்பக் கல்வியும், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்று மத்திய அரசுப் பணியான ஐ.ஆர்.எஸ் வேலையைப் பெற்றவர். மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 117-வது ரேங்க் பெற்று, ஐ.ஏ.எஸ். பணியைப் பெற்றவர். 

இளம்பகவத் ஐஏஎஸ் ஏற்கெனவே பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்துள்ளார். திருநெல்வேலியில் உதவி ஆட்சியராகப் பணியாற்றி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory