» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மறை மாவட்ட தலைமைச் செயலர் நியமனம்
செவ்வாய் 28, மே 2024 11:44:48 AM (IST)
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய தலைமைச் செயலாளராக அருட்தந்தை ஜெகதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி மறை மாவட்டத்தின் புதிய தலைமைச் செயலாளராக அருட்தந்தை ஜெகதீஷ், ஆயர் ஸ்டீபன் ஆண்டகையால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மறை மாவட்டத்தின் பொருளாளராக கடந்த காலங்களில் திறம்பட பணிபுரிந்தவர். அணைக்கரை, உடன்குடி, அடைக்க லாபுரம், வேம்பார் போன்ற இடங்களில் மக்கள் பணியாற்றியவர்.
திருச்செந்தூர் அடைக்கலாபுரத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. இதற்காக தமிழக அரசால் கவுரவிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட நீதித்துறை நடுவராக தூத்துக்குடி ஆயர் இல்லத்தில் பதவியேற்கிறார்.
மக்கள் கருத்து
nishaமே 29, 2024 - 01:13:08 PM | Posted IP 172.7*****
congratulation father
கவிமே 28, 2024 - 03:13:15 PM | Posted IP 162.1*****
இதற்கு முன் இவர்கள் பணியாற்றிய ஊர் கீழவைப்பார்....
Dimal.sமே 30, 2024 - 10:16:06 PM | Posted IP 162.1*****