» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண மண்டபத்தில் ஒருவர் வெட்டிக் கொலை : உறவினர் வெறிச்செயல்!

திங்கள் 27, மே 2024 10:41:43 AM (IST)

குலசேகரப்பட்டினம் அருகே திருமண மண்டபத்தில் உணவு பரிமாறும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே சிறுநாடார் குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50). கூலி தொழிலாளி. இவருடைய தம்பி சுயம்புவின் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா, அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நேற்று இரவில் நடந்தது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த உறவினரும், சமையல்காரருமான துரைப்பாண்டி (60) ஈடுபட்டார்.

பின்னர் பந்தியில் உணவு பரிமாறியபோது செந்தில்குமாருக்கும், துரைப்பாண்டிக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அவர்களை உறவினர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் சமுதாய நலக்கூடத்தின் வெளியே நின்று செந்தில்குமார் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துரைப்பாண்டி அரிவாளால் செந்தில்குமாரின் வலது காலில் வெட்டியதாக கூறப்படுகிறது. 

இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.  இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமண மண்டபத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

inbaமே 28, 2024 - 08:47:58 PM | Posted IP 162.1*****

so sad

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory