» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கடற்கரையில் தீக்குளித்த நபர் மருத்துவமனையில் அனுமதி!!
சனி 25, மே 2024 9:56:21 PM (IST)
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடங்கனேரியைச் சோ்ந்த பரமசிவன் மகன் மாதவன் (52). 4 குழந்தைகள் உள்ளனா். இவா், திருச்செந்தூா் கோயில் கடற்கரை அய்யா அவதாரபதி கலையரங்கு அருகே இன்று மாலை மது போதையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டாராம்.
தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தோா் அவசர ஊா்தியில் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்செந்தூர் கடற்கரையில் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.