» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடன் செயலி மூலம் மிரட்டல்: பொறியியல் கல்லூரி மாணவர் புகார்!
புதன் 15, மே 2024 5:38:00 PM (IST)
குமரியில் கடன் செயலி மூலம் பணம் கட்டிய பின்னரும் மேலும் பணம் கட்ட சொல்லி மிரட்டுவதாக பொறியியல் கல்லூரி மாணவர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் ஆன்லைன் செயலி மூலம் தான் எடுத்த கல்வி கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகு மேலும் பணம் கட்ட சொல்லி மிரட்டல் வருவதாகவும், பணத்தை மீண்டும் கொடுக்காததால் அவருடைய படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு அனுப்பியதாகவும் நாகர்கோவிலில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.