» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெளிநாட்டில் பணி செய்ய செவிலியர்களுக்கு இலவச மொழி பயிற்சி : ஆட்சியர் தகவல்!
புதன் 15, மே 2024 3:54:00 PM (IST)
வெளிநாட்டில் செவிலியர் பணிக்கு செல்ல விரும்பும் தகுதியுடைய செவிலியர்களுக்கு அயல்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள இலவச பயிற்சி வழங்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வெளிநாட்டில் செவிலியர் பணியமர்த்த பல்வேறு நாடுகளில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. தற்போது முதன் முறையாக வெளிநாட்டில் செவிலியர் பணிக்கு செல்ல விரும்பும் தகுதியுடைய செவிலியருக்கு அயல்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் மொழிகள் இலவசமாக பயிற்றுவிக்கப்பட இருக்கிறது.
இந்நிறுவனம் மூலம் அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைக்கான பணிகள் குறித்த விபரங்களை இந்நிலைய வலைதளமான www.omcmanpower.tn.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனவே வெளிநாட்டில் வேலைசெய்ய விரும்பும் தகுதியுள்ள செவிலியர்கள் தங்கள் விபரங்களை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

Asha.mJul 2, 2024 - 08:05:05 AM | Posted IP 162.1*****