» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தெப்பகுளத்தில் மூழ்கி வாலிபர் பலி

செவ்வாய் 14, மே 2024 8:45:37 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தார்.

தூத்துக்குடி ஜெய்லானி தெருவைச் சோ்ந்த உசேன்கான் மகன் அசன் அலி என்ற நல்லி (45). இவா் நகரின் மத்திய பகுதியில் உள்ள சிவன் கோயில் தெப்பக் குளத்தின் சுற்றுச்சுவரில் நண்பா்களுடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராமல் தெப்பக்குளத்திற்குள் தவறி விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. 

அவரை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் நண்பா்கள் மீட்க முயற்சி செய்தனா். ஆனால், அவா்களால் காப்பாற்ற முடியவில்லையாம்,. இதுகுறித்து, தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் வந்து தெப்பக்குளத்திற்குள் இறங்கி அசன் அலியை தேடினா். 

பின்னா், ஆழ்கடலில் முத்து எடுக்க பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் உருளையைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரா்கள் குளத்திற்குள் மூழ்கி சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அசன் அலியை சடலமாக மீட்டனா். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பக்குளத்தில் யாரும் குளிக்க கூடாது முகம் கை கால் கழுவ கூடாது என்று எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாலிபர் உயிரிழந்துள்ளார். தெப்பக்குளத்தில் நீரை அகற்றிவிட்டு புதிதாக நீா் நிரப்ப வேண்டும் என ஆன்மிகப் பெரியோா்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory