» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

செவ்வாய் 14, மே 2024 11:04:04 AM (IST)

தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி பொட்டல்காடு நடுத் தெருவைச் சேர்ந்தவர் அரசமுத்து மகன் சின்ன சுப்பையா (52). இவர் நேற்று முள்ளக்காடு கக்கன்ஜி நகரில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த சின்ன சுப்பையா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப் பதிந்து மற்றொரு பைக்கை ஓட்டி வந்த தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் மகன் அந்தோணி என்பவரை கைது செய்து விசாணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory