» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தல் ஒத்திகை : ஆட்சியர் ஆய்வு

புதன் 24, ஏப்ரல் 2024 12:19:46 PM (IST)தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று  நடைபெற்றது.

சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த ஒத்திகை இன்று நடைபெற்றது. இதில் பயணிகள் விமானக் கடத்தலை தடுக்கவும், அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச் சோதிக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை எதிா்கொள்ளவும் ஒத்திகை நடைபெற்றது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமையில் விமான நிலைய குழுக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் தயாா்நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் விமான நிலைய இயக்குநா் ஆா்.ராஜேஷ், மற்றும் மத்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு படை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

இது என்ன தலைப்பு ?Apr 24, 2024 - 06:10:55 PM | Posted IP 172.7*****

அது என்ன பரபரப்பு நாடகமா?

NameApr 24, 2024 - 02:04:58 PM | Posted IP 162.1*****

Orukulla potta roada daily thondi thondi moduranuga atha parunga konjam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory