» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து : ரூ.10 லட்சம் சேதம்

புதன் 24, ஏப்ரல் 2024 8:23:16 AM (IST)

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில்  ரூ.10 லட்சம் மதிப்பிலான மூலப் பொருள்கள், இயந்திரம் எரிந்து சேதம் அடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் அருண்குமார். இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை, சங்கரலிங்கபுரம் மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. 10 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு நேற்று முன்தினம் தீப்பெட்டி தொழிற்சாலை திறக்கப்பட்டது. நேற்று காலையில் தொழிற்சாலையில் உள்ள அனைத்து பிரிவு தொழிலாளர்களும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மெஷின் யூனிட் பகுதியில் அதிக மின்னழுத்தம் காரணமாக தீக்குச்சி தயாரிப்பு எந்திரம் வெப்பமாகி, மெழுகு பேரலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ சில நிமிடங்களில் மளமளவென எந்திரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனால் தொழிற்சாலை எந்திர பகுதி முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டதும் தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி காயமின்றி தப்பினர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். தொழிற்சாலைக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் மெழுகு பேரல்கள், தீக்குச்சிகள் மற்றும் எந்திரம் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. தொடர்ந்து அந்த தொழிற்சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory