» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடல் சீற்றம் : திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை

ஞாயிறு 5, மே 2024 6:57:22 PM (IST)

கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தினந்தோறும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தரிசனத்திற்கு முன்னதாக அவர்கள் கடலில் புனித நீராடி அதன்பின்னரே சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் கடல் அலைகள் 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை கடல் வழக்கம்போல் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பிற்பகலில் 1 மணி அளவில் கடலில் சீற்றம் ஏற்பட்டு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் வெளியேறியது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. மேலும், கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory