» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் எதிரொலி: ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு... பயணியர்கள் அதிருப்தி!

வியாழன் 18, ஏப்ரல் 2024 7:40:26 PM (IST)

மக்களவை தேர்தல் காரணமாக ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் தொலை தூரங்களுக்கு ஆம்னி சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகளை விட தனியார் ஆம்னி பேருந்துகளில் பல வசதிகள் இருப்பதால் மக்கள் பலர் விருப்பம் கொண்டு பயணித்து வருகின்றனர். சாத்தான்குளம் பகுதியில்இருந்து சென்னை, கோவை, திருப்பூர். உள்ளிட்ட பகுதிக்கு புறப்பட்டு செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு ஏஜெண்ட்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமும், ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.. 

இந்த ஆம்னி பேருந்து களுக்கு நிரந்தர கட்டணம் நிர்ணயம் இல்லாமல் உள்ளதால் சீசனுக்கு தகுந்தார் போல் கட்டண் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சுப மூர்த்தநாள் மற்றும் தீபாவளி, பொங்கல் உள்ளிடட விசேஷ நாள்களுக்கு தகுந்தாற் கட்டணம் நிர்ணயிக்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மக்களவை தேர்தல் என்பதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க திரும்புகின்றனர். 

வரும் விடுமுறை நாட்களில் வெளியூர்களில் வேலை செய்யும் மற்றும் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளும் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். பொதுமக்களின் இந்த அவசர நிலையை பயன்படுத்தி இந்த சமயத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களது பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளனர் இது பயணியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது.

மேலும் தமிழக அரசு பஸ் நிர்வாகமும் தேர்தல் மற்றும் விடுமுறை காலங்களில் அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கிட முன்வரவில்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் பெரும்பாலான நேரங்களில் சர்வர் முடங்கிய நிலையில் உள்ளது.இதனால் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பொதுமக்கள் வேறு வழி இல்லாமல் கூடுதலாக கட்டணம் என்றாலும் முன்பதிவு செய்து தனியார் பேருந்து பயணித்து வருகின்றனர். 

ஆம்னி பேருந்துகளின் இந்த கூடுதல் கட்டணத்தை நெறிமுறை படுத்த தமிழக அரசு தலையிட வேண்டும் என பயணியர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தொலைதூரங்களுக்கு செல்லும் அரசு விவைவு பேருந்துகள் மற்றும் சாதாரண பஸ்களுக்கு எந்நேரமும் ஒரே கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதனையை தனியார் ஆம்னி பேருந்துகள் கடை பிடிக்க அரசு கட்டண நிர்யணம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory