» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்குசாவடி மையத்திற்கு இலவச வாகன வசதி : ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, ஏப்ரல் 2024 5:52:35 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குசாவடி மையத்திற்கு அழைத்து சென்று வர இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 19.04.2024 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் எளிதில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் பொருட்டு அவர்களது வீட்டிலிருந்து வாக்களிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று வர இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வாகன வசதி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் சக்ஷம் செயலி (SAKSHAM APP) அல்லது ‘1950" என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.