» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் நகை திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 18, ஏப்ரல் 2024 12:03:50 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மனைவி சுப்புலட்சுமி (47). நேற்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர், மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 9 பவுன் நகை, வெள்ளி கொடிகள், ரூ.1000 பணம், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை திருடு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்ஸி வழக்குப் பதிந்து, கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு விபரம்!
சனி 22, மார்ச் 2025 12:43:10 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
சனி 22, மார்ச் 2025 11:44:54 AM (IST)

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

நகைக்கடை அதிபரை கடத்தி கொல்ல சதித்திட்டம் : தூத்துக்குடி ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
சனி 22, மார்ச் 2025 8:51:59 AM (IST)

அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!
சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)
