» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் புறக்கணிப்பு: கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்!

புதன் 17, ஏப்ரல் 2024 3:28:30 PM (IST)



சாத்தான்குளம் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக கருப்புகொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கருங்கடல் ரேஷன் கடை தெருவில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த பாதையை மதில் சுவர் அமைத்து அடைத்து உள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்கள் வெளியே செல்லாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கருப்புக் கொடி கட்டியுள்ளனர். மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர். 



இது போல் பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்களை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். மேலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory