» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையம் சிகப்பு மண்டலமாக அறிவிப்பு: டிரோன்கள் பறப்பதற்கு தடை!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 3:43:02 PM (IST)

தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு ‘சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு ‘சிவப்பு மண்டலமாக” (Red Zone)ஆக அறிவித்து இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுவதாக பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  வெளியிட்ட அறிவிப்பில், "தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆவணங்கள் பாதுகாப்பிற்காக தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு அனைத்து வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் டிரோன்கள் பறப்பதைத் தடை செய்ய அறிவுரை வரப்பெற்றுள்ள காரணத்தினால் தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவிற்கு ‘சிவப்பு மண்டலமாக” (Red Zone) ஆக அறிவித்து டிரோன்கள் இன்று முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாள் வரை பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

மேலும் இந்த தடையை மீறும்பட்சத்தில் உரிய விதிகளின் கீழ் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory