» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் கதவை உடைத்து திருடிய வாலிபர் கைது!

திங்கள் 15, ஏப்ரல் 2024 8:41:30 AM (IST)

தூத்துக்குடி அருகே கோவில் மணி மற்றும்  வீட்டின் கதவை உடைத்து டிவி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அருகே உள்ள மேலமருதூரில் கருப்பசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் கிரில்கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி கோவிலில் இருந்த 5 வெண்கல மணியை திருடி சென்று விட்டாராம். இதே போன்று மேலமருதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலகருப்பசாமி (38) என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், அங்கு இருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டாராம்.

இது குறித்து தருவைகுளம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்ற மூக்காண்டி (30) என்பவர் டி.வி மற்றும் கோவில் மணிகளை திருடியது தெரியவந்தது. உடனடியாக தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை ஆகியோர் முருகானந்தம் என்ற மூக்காண்டியை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory