» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.81லட்சம் பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் ஆட்சியர் தகவல்

சனி 13, ஏப்ரல் 2024 2:57:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பறக்கும் படைக் குழுவினரால் உரிய ஆவணமின்றி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் இதுவரை ரூ.81லட்சம் ரொக்கம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, 36.தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் நடத்தைவிதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்,  தொகுதி ஒன்றுக்கு 3 எண்ணிக்கையிலான பறக்கும் படைகள் வீதம் 3 சுழற்சியாக மொத்தம் 54 பறக்கும் படைகளும், அதேபோல் சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்கு 3 எண்ணிக்கை வீதம் 3 சுழற்சியாக மொத்தம் 54 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் இம்மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், C-Vigil  கைபேசி செயலி மூலம் 74 புகார்களும், கட்டணமில்லா தொலைபேசி மூலம் 53 புகார்களும், வாட்ஸ்அப் செயலி மூலம் 28 புகார்களும் மற்றும் இணையதளம் வாயிலாக 109 புகார்களும் என மொத்தம் 264 புகார் மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் முடிவு காணப்பட்டுள்ளன. இதற்கெனவே பிரத்யேக தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் (24x7) முழு நேரமும் செயல்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்களை1800-599-1960, 0461-2981900, 2981901, 2981902, 2981903 மற்றும் Whatsapp எண் 94864-54714  மூலம் தெரிவிக்கலாம்.

அதுமட்டும்மல்லாமல், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒன்று வீதம்  6 எண்ணிக்கையிலான வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. மேற்படி பறக்கும் படைக் குழுவினரால் உரிய ஆவணங்களின்றி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், பரிசுபொருட்கள் மற்றும் மதுபானங்கள் குறித்த விபரம் கீழ்கண்டவாறு உள்ளன.

பறக்கும் படைக் குழுவினரால் உரிய ஆவணமின்றி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் 13.04.2024 மு.ப. 6.00 மணி வரை ரூ.81,13,064 மதிப்பில் ரொக்கம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி  தகவல் தெரிவித்துள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory