» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மே தின விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வியாழன் 2, மே 2024 8:10:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.மின்னல்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.மின்னல்கொடி தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் நேற்று சிறப்பாய்வு மேற்கொண்டனா்.

இதில், மே தினத்தன்று தொழிலாளா்களைப் பணியமா்த்தியதற்காக உரிய வழிமுறைகளைப் பின்பற்றாத 37 கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், 33 உணவு நிறுவனங்கள், 3 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தொழிலாளா் துணை ஆய்வாளா் ஆறுமுகம், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் ரா. பிரேம் குமாா், ச. செய்யதலி பாத்திமா, சி.ஹொ்மஸ் மஸ்கா்னாஸ், கோவில்பட்டியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் பெ.சூரியன், திருச்செந்தூரில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் மு.ஜோதிலெட்சுமி , ஸ்ரீவைகுண்டத்தில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் சு.சுரேஷ்குமாா், சாத்தான்குளத்தில் தொழிலாளா் உதவி ஆய்வாளா் சே.சந்திரா ஆகியோா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory