» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் கைது!.

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:53:41 PM (IST)

சாத்தான்குளம்  அருகே மாட்டு வண்டியில் மணல்  கடத்தியதாக இருவரை போலீசார்   கைது செய்து வண்டியை   பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில்  திருட்டுத் தனமாக ஓடை மற்றும் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்  காவல் உதவி ஆய்வாளர்  நாகராஜ் தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது செம்மன்குடியிருப்பு பகுதியில் மாட்டு வண்டியை விட்டு  தப்பி ஓட முயன்ற இருவரை பிடித்து  விசாரணை நடத்தினர். 

அதில் செம்மன்குடியிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்த வேதக்கண் மகன் கோசல்ராம் (47), வடக்கு தெருவைச் சேர்ந்த சாமி மகன் சுயம்புத்துரை (58) ஆகியோர் எந்தவித  அனுமதியும் இன்றி அதே பகுதியில் உள்ள ஓடையில் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. உடன் போலீசார் இருவரை கைது செய்து அரை யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory