» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:50:51 PM (IST)
சாத்தான்குளம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2லட்சத்தை பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன் குடியிருப்பு சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் ரத்தினராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதில் வேனை மறித்து சோதனை நடத்தினர். அதில் ரூ 1.56 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி தெரியவந்தது.
விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சேர்ந்தவர் பொன்பாண்டி மகன் முருகன் (28) திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் கோழி தீவணம் வியாபாரம் முடித்து ஊர் திரும்பியுள்ளதும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதே போல் அதில் வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர். அதில் ரூ 51,100 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆலந்தலை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(50) என்பவர் சுமை ஆட்டோவில் மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று மீன் வியாபாரத்திற்காக சென்று வந்ததும். பணத்திற்கான உரிய. ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியான வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்கள் காட்டி பணத்தை திருப்பி பெற்றுகொள்ளலாம் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.