» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பறக்கும்படை சோதனையில் ரூ.15.69 லட்சம் மதிப்புள்ள 185 சேலைகள் பறிமுதல்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:16:03 PM (IST)

விளாத்திகுளம் அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 185 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சென்னம ரெட்டியபட்டி சோதனைச் சாவடியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடுதல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.15 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 185 சேலைகள் இருப்பது தெரியவந்தது.
வாகனத்தில் வந்த அந்நிறுவனத்தின் ஊழியரான மதுரையைச் சேர்ந்த அடைக்கலராஜ் மகன் ரோவினஸ் ஆரோக்கியசாமி (43) என்பவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா, வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் விளாத்திகுளம் அரசு சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காமல் மோசடி:
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)
