» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே தகவல்

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 3:10:24 PM (IST)



தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தூத்துக்குடி சென்னை எழும்பூர் முத்து நகர் ரயில் (12694), தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதல் 16 வரையும், மைசூர் - தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் 15 வரையும் மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று அறிவித்துள்ள தெற்கு இரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்ம நாயகம், எம்பவர் இந்தியா, நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கெளரவ செயலாளர்  ஆ.சங்கர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINApr 4, 2024 - 09:02:45 AM | Posted IP 172.7*****

இந்த உத்தரவை நிரந்தரமாக்க வேண்டும். வருடத்தின் அனைத்து நாட்களிலும் மேலூர் ரயில் நிலையத்தில் சென்னை, மைசூரு ரயில்கள் நின்று செல்வது (இரு மார்க்கங்களிலும்) பயணிகளுக்கு வரப்பிரசாதமாகும். எனவே ஆண்டு முழுவதும் இந்த ரயிகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். மக்கள் பிரதிநிதிகள், தென்னக ரயில்வே நிர்வாகம் இந்த கோரிக்கையை பரிசீலிக்கவும்.

ஜான் செல்வராஜ்Apr 2, 2024 - 10:13:34 PM | Posted IP 172.7*****

இரயில் துறை அதிகாரிகளுக்கு நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory