» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் துணை இராணுவப் படை, போலீசார் கொடி அணிவகுப்பு!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 3:02:34 PM (IST)விளாத்திகுளத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய துணை இராணுவப் படை, மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில்  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்களிப்பதற்காக பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், விளாத்திகுளத்தில் மாநில காவல் துறையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் 100-க்கும் மேற்பட்டோர் விளாத்திகுளம் நகர்ப்பகுதியில்  இசைக்கருவிகள் முழங்கியவாறு அணிவகுத்து ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.

தமிழகத்தில், வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதி மக்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று பொதுமக்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில் டி.எஸ்.பி இராமகிருஷ்ணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

இதில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை இராணுவப் படையினர் என 100க்கும் மேற்பட்டோர் இசைக்கருவிகள் முழங்கயவாறு அணிவகுத்து விளாத்திகுளம்  மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட், தாலுகா ஆபிஸ் ரோடு, எட்டையபுரம் ரோடு வழியாக சென்று விளாத்திகுளம் ஆற்றுப்பாலம் வரை சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory