» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம் : பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு!!

திங்கள் 1, ஏப்ரல் 2024 3:12:53 PM (IST)



பிரதமர் மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம், தமிழ் மொழி கற்றுக் கொள்ளட்டும் என பிரச்சாரத்தில் கனிமொழி பேசினார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். அப்போது கனிமொழி பேசியதாவது: ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் நிதியாக அளிக்கும் பொழுது நமக்கு 25 பைசா மட்டுமே நிதி பகிர்வாக அளித்து வருகிறது.  ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் இரண்டு ரூபாய் என இரட்டிப்பு நிதி பகிர்வு அளித்து, தமிழ்நாட்டை ஓரவஞ்சனை செய்கிறது. தமிழ்நாடு கடந்த டிசம்பர் மாதம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் மக்களின் பாதிப்புகளைப் பார்க்காத பிரதமர், தேர்தல் சமயம் என்றவுடன் 10 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்று உள்ளார்.

மோடிக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தமாக உள்ளதாம், தமிழ் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டுமாம், பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். இப்போது கூட ஒரு பிரச்சனையும் இல்லை ஒரு நல்ல ஆசிரியரை அனுப்புகிறோம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும் மோடி. பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

பாஜகவும் - அதிமுகவும் பிரிந்துவிட்டதாக கூறுவது நாடகமானது, தேர்தல் முடிந்த பிறகு அதிமுக பாஜகவை ஏற்றுக் கொள்ளும், தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி எங்காவது பாஜகவைப் பற்றியோ, மோடியை பற்றியோ வாய் திறக்கவில்லை. அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான், இரண்டுமே ஸ்டிக்கர் கட்சிகள், முன்னாள் மாற்றுக் கட்சியின் அரசு கொண்டு வந்த திட்டங்களை பெயர் என்னும் ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கொண்டு வந்தது போலக் காட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு கனிமொழி தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து

ஓ அப்படியாApr 2, 2024 - 08:58:45 AM | Posted IP 162.1*****

மீண்டும் திகார் ல அனுப்பி விடுவாங்க 😁😁😁

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory