» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தரமற்ற சாலைப் பணிகள்: பொதுமக்கள் போராட்டம் ; தூத்துக்குடியில் பரபரப்பு!!

திங்கள் 1, ஏப்ரல் 2024 10:26:08 AM (IST)தூத்துக்குடியில் தரமற்ற முறையில் சாலைப் பணிகள் நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி ராமசாமிபுரம் முதல் தெரு, பக்கிள்புரம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தரமற்ற வகையில் சாலைப் பணிகள் நடப்பதாக கூறி சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், "ராமசாமிபுரம் முதல் தெரு, பக்கிள்புரம் பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது. இதனை முறையாக அமைக்கப்படவில்லை. மேலும் பல வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை.  

இப்பணிகளை நிறைவேற்றாமல் அவசர கதியில் சாலைகள் அமைக்கப்படுகிறது. சாலைப் பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், கழிவு நீர் கால்வாய், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கிய பின் தரமான முறையில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து

புவனேந்திரன்Apr 4, 2024 - 06:54:52 AM | Posted IP 162.1*****

இது எல்லாமே தேர்தல் நாடகம் . தேர்தல் ஆணையமும் அதைவிட மோசம் எவ்வளவு நாட்களாக இந்த சாலைகள் மோசமான நிலையில் இருந்தது இப்போது போடுவது தேர்தல் விதி மீறல்கள் அப்படியானால் தேர்தல் ஆணையமும் ஒரு நாடக கம்பெனி

சிதம்பர நகர் ஏரியாApr 1, 2024 - 12:50:09 PM | Posted IP 162.1*****

சிதம்பரநாகரில் அரைகுறை சாலை அப்படியே மண் , மணல் கொட்டி போய்ட்டாங்க , மாநகராட்சி எல்லாம் அறை குறை பயலுக . மேயர் ஜெகன் அவர் ஓட்டு கேக்க ஊர் சுற்ற போயிட்டாரு. வேஸ்ட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory